Homepage Badaga Community Forum Index FAQ Search Usergroups Profile Log in to check your private messages Log in Register
Badaga Community
Welcome to Badaga community forum
View next topic
View previous topic
Post new topic Reply to topic
Author Message
gopenath
Frequent poster


Joined: 12 Feb 2007
Posts: 573

PostPosted: Fri Jun 20, 2008 12:48 am Reply with quoteBack to top

கேனையனைக் காதலிக்கிற அப்பாவிப் பெண்களுக்கு மட்டும்..!

பசங்களா இன்னிக்கும் எட்டிப்பார்க்காதீங்க..
நம்ம பொண்ணுங்க எல்லாம் கராத்தே,குங்பூ கத்துட்டிருக்காங்க.
அப்புறம் 'தசாவதாரம்' சிட்டி பாபு மாதிரி சீன்ல சும்மா எட்டிப் பார்த்தே நொந்துடுவீங்க..
பொண்ணுங்களா வரிசையா வாங்க..காதலனையும் கூட்டிட்டே வந்துருக்கீங்களா?
அப்போ அவனுங்களையெல்லாம் வாசலோட செருப்பைப் போலக் கழட்டிட்டு வாத்தியார் நடத்துற கிளாஸுக்கு வாங்க.
இன்னிக்கு நம்ம பாடம் என்னன்னா காதல்ல மாட்டிக்கிட்டுத் தவிக்குற பொண்ணுங்களுக்கு அவங்க காதலன் உண்மையானவனான்னு எப்படிக் கண்டுபிடிக்கிறதுன்னும் நட்டுக் கழண்ட கேஸ்னா எப்படிக் கழட்டி விடுறதுன்னும் பார்க்கலாம்.
1.அன்னிக்கு சொன்னதையெல்லாம் தாண்டி அவன் காதல்ல நீங்க விழுந்துட்டீங்கன்னு வைங்க..உங்க நாலாவது சந்திப்பிலேயே ஒரு துளிக் கண்ணீரை கண்ல காட்டுவான்..அவனைக் கேட்டா ரகசியமா காதல் அஸ்திவாரக் கொங்க்றீட்டை பலப்படுத்துறேன்பான்..உங்கக்கிட்ட காரணம் சொல்ல மாட்டான்..அப்பவாவது சூதானமா இருந்துக்க தாயி..

2..தாடி,மீசைல ஆயிரம் அலங்காரம் பண்ணிப்பான்..யாராவது கேட்டா லேட்டஸ்ட்ம்பான்..நம்பிடாதீங்க..அதுல போடுற ஒவ்வொரு அலங்காரமும் உங்க மனசைக் கலைக்கத்தான்.

3.உங்கக் கூட ரோட்ல,பீச்ல கடலை போட்டுட்டு இருக்குறப்ப எவனாவது ஒட்டடைக்குச்சிக்கு ட்ரஸ் போட்டுவிட்ட மாதிரி நோஞ்சானா ஒருத்தன் மாட்டிட்டான்னு வச்சிக்குங்க..தொலைஞ்சது அவன் கதி...ஏதோ நாலஞ்சு 'குருவி' விஜய்யும்,ஒரே ஒரு விஜயக்காந்தும் அவனுக்குள்ள படுத்துட்டிருந்த மாதிரியும் அந்த நோஞ்சான் பையன் அதை உசுப்பி எழுப்பிவிட்ட மாதிரியும் வலிய சண்டைக்குப் போவான் பாருங்க..அது அவன் வீரத்தை உங்கக்கிட்டக் காட்டத்தான்..பார்த்து மயங்கிடாதீங்க..

4.பையன் ரெண்டு,மூணு செல்போன் வச்சுப்பான்..ரிங்க் டோனா ஏதாவது காதல் பாடல் வச்சிட்டிருப்பான்.. தன்னோட சுத்துவட்டாரத்துக்குக் காசு செலவழிச்சு உங்ககூட இருக்குற நேரமாப் பார்த்து ஏதாவது லவ் மேசேஜ் அனுப்பச் சொல்லுவான்..உங்ககிட்ட அதைக் காட்டி பக்கத்து வீட்டுப் பரிமளா லயிருந்து பூ விக்குற மல்லிகா வரை அவனை காதலிக்கச் சொல்லிக் கெஞ்சுறதாவும் ஆனா அவன் மனசு உங்களையே சுத்திட்டு வர்றதாவும் கதை விடுவான்..நீங்களும் உண்மையின்னு நம்பித் தொலைச்சீங்கன்னு வச்சிக்குங்க..அப்புறம் பாலக்காட்டுப் பக்கத்துல அப்பாவி ராணி நீங்க தான்.

5.அப்புறம் தூரத்துல இருந்து பார்த்தா உங்க பிரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து கூடிக் கும்மியடிச்சிட்டிருக்காங்க...அதுல அந்தப் பையனும் இருக்கான்..'என்னடா நம்ம பின்னால அலையுற ஆளு இந்தக் கருமாந்திரம் புடிச்சவளுக கூட இம்புட்டுக் கடலை போடுது'ன்னு நீங்க பக்கத்துல போனா பையன் பட இடைவேளை ரஜினி மாதிரி சைலண்ட் ஆகிட்டான்னு வச்சிக்குங்க..அப்ப உங்க மூளைல அலாரம் அடிக்கணும்..உடனே முழிச்சுக்கணும்...

6.அப்புறம் சின்னச் சின்ன நோய்நொடியெல்லாம் சொல்லுவான்..ஒருநாளைக்கு கால்வலிம்பான்..இன்னொரு நாளைக்கு கண் வலிம்பான்..நீங்களும் பரிதாபப்பட்டு அவசர மருத்துவராகி 'அச்சச்சோ'ன்னு அன்பா அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிட்டீங்கன்னு வச்சிக்குங்க..அவன் மனசுக்குள்ள 1000 பிரபுதேவாக்கள் டான்ஸ் ஆட ஆரம்பிப்பாங்க..நீங்கதான் ஏமாறாம இருக்கனும்.

7.ஆபிஸ் விட்டு வர்ரப்போ ஏதோ எவரெஸ்டையே சரிச்சிட்டு வர்ற மாதிரி டயர்ட் ஷோ காட்டுவான்.பரிதாபப்படாதிங்க..அந்த ஆபிஸ்ல எந்த ஆணியும் பிடுங்கல..சும்மா உங்களை பீல் பண்ண வைக்கத்தான்.

8.ஒரு நாள் திடீர்னு பார்த்தீங்கன்னா அவன் கையில ஒரு தாயத்து நூல் இருக்கும்..நீங்க உடனே உலக அழகிப்பட்டம் ஜெயிச்ச ரேஞ்சுக்கு ஆச்சரியமாகி என்னன்னு கேட்டீங்கன்னா நம்ம காதல் நிறைவேறணும்னு கருப்பசாமி குத்தகைதாரருக்கு நேந்துக்கிட்டு கட்டினேன்னு கதை கதையா விடுவான்..நீங்களும் ராமராஜன் பட ஹீரோயின் மாதிரி செண்டிமெண்டா அப்செட் ஆகிடுவீங்க..சாக்கிரதை..

9.நீங்களும் லவ் பண்ண ஆரம்பிச்சுக் கொஞ்சநாள் தான் ஆகியிருக்கும்.அதுக்குள்ள 'காதல்'பரத்,சந்தியா மாதிரி எங்காவது தூர ஒரு இடத்திற்கு பயணம் போகக் கூப்பிடுறான்னு வைங்க..உடனே அவனைக் கழட்டி விட்டுடுங்க..அவன் மோசமான ஆளு..இல்லேன்னா 'காதல்' கிளைமேக்ஸ் பரத் மாதிரி நீங்கதான் 'ஞே ஞே' சொல்லிட்டுத் திரிய வேண்டி வரும்..

10.பையன் ரொம்ப நல்லவனாயிருக்கானே..கோயில்,குளத்துக்கெல்லாம் கூப்பிடுறானேன்னு உடனே போயிடாதீங்க..சாமி முன்னாடி நிக்க வச்சு ஏதாவது செண்டிமெண்டாப் போட்டுத்தாக்கி தாலி கட்டிடுவான்..கவனமாயிருங்க.

11.புது மொபைல்,கேமரா வாங்கியிருக்கேன்,பாருடா செல்லம்னு நீட்டினான்னா உடனே வாங்கி முதல்ல சுவிட்ச் ஆப் பண்ணிடுங்க..ஏதாச்சும் வீடியோ பண்ணிட்டு அப்புறம் வில்லங்கம் பண்ணிடுவான்.

12.ஏதோ தாய்க்குலத்தை மதிக்கிறேன்,குழந்தைகளை நேசிக்குறேன்,காத்துல பறக்குறேன்,வௌவாலா மெதக்குறேன்னு ரொம்பத்தான் கதையள்ளி விடுவான் பாருங்க.எதையுமே கண்டுக்காதீங்க..அத்தனையும் உங்களை ஒப்பேத்தத்தான்..மனசுக்குள்ள அப்படியொண்ணும் கிடையாது..

13.சாப்பாட்டு விஷயத்துல நீங்க எப்படின்னு கேட்டுட்டான்னு வைங்க..நீங்க சைவம்னா அவனும் சைவம்பான்.ஏமாந்துடாதீங்க..கல்யாணத்துக்கப்புறம் நண்டுக்கறி கேட்டு உங்களை சீன ஹோட்டல் ரேன்ஜுக்கு நடத்துவான்..

14.நீங்க நாலஞ்சு இன்சுக்கு மேக்கப் பண்ணிக்கிறதோ,ஸ்டூல்ல நிக்குற மாதிரி செருப்புப் போட்டுக்குறதோ அவனுக்குப் பிடிக்காத மாதிரி காட்டிக்குவான்.எல்லாம் 'ஒரு சூப்பர் பிகரு,சப்பைப் பயலுக்கு விழுந்துட்டானே'ன்னு எவனாவது சொல்லிடக்கூடாதுங்குற பயத்துலயும்,கல்யாணத்துக்கப்புறம் அந்த செலவெல்லாம் அவனோட தலையில விழுமுங்குற பயத்துலயும் தான்.
நீங்க கண்டுக்காமக் கழட்டி விட்டுடுங்க ஜூலியா ராபர்ட்ஸ்களா.

15.நுனி நாக்குல இங்கிலீஷ்ல பேசுவான்..'ஆக்சுவலி..யூ சீ'ன்னு ஏதோ பி.பி.சி செய்தி வாசிக்கிற மாதிரி பிலிம் காட்டுவான்.கண்டுக்காதீங்க..அப்புறம் உங்க காதலைத்தான் செய்தியாக்கிடுவான்.

16.சமயம் பார்த்து உங்களை ரொம்ப வர்ணிப்பான்..'ஏய்..உனக்கு மாடலிங் பண்ணலாம்'ல..''நீ மட்டும் பாலிவுட்டுக்குப் போயிட்டே தீபிகா படுகோனேயெல்லாம் ஓடிடுவாங்க'ன்னு உங்க தலையில திருமதி.அபிஷேக் பச்சனைக் குடம் குடமா வைப்பான்..நீங்க உடனே உச்சி குளிர்ந்து ஏமாந்துடாதீங்க.

17.அப்புறம் உங்களைக் கைக்குழந்தையா நெனச்சு ரொம்ப அதிகமாச் செல்லம் கொஞ்சுறவனையோ,யாராச்சும் அழகான சின்னக் குழந்தையோட போட்டோ காட்டி அது
அவன் தான்னு சொல்றவனையோ விரட்டியடிச்சிடுங்க..அவன் மனசுல வில்லங்கமிருக்கு கண்ணுகளா.

18.சாதாரணமா ஹோட்டல்லயோ,பஸ்ல உங்க கூட உக்காந்திட்டிருக்கும் போதோ ஏதோ ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அடுத்த இசையமைப்பாளர் இவர்தாங்குற நெனப்புல தாளம் தட்டிட்டே இருந்தான்னு வச்சிக்குங்க..உடனே விலகிடுங்க..இல்லேன்னா பின்னாடி உங்களை பஞ்சப்பாட்டுப் பாட வச்சிருவான்.

19.அவனை விட்டு நீங்க பிரிஞ்சு போயிட்டீங்கன்னா விஷம் குடிச்சிடுவேன்னு பையில போத்தலோட அலையிறவனை உடனே கை விட்டுடுங்க..அது சும்மா உங்களை பயங்காட்டுறதுக்கு.போத்தலுக்குள்ள தண்ணி தான் இருக்கும்.

20.நீங்க கொடுக்குற மிஸ்ட் கோலுக்கு உடனே அவன் கோல் பண்ணலைன்னாலோ,அவன் செலவுல ஷாப்பிங் கூட்டிட்டுப் போகலைன்னாலோ,உங்க நாய்க்குட்டி பேர்த் டே க்கு ஞாபகமா அவன் வாழ்த்துச் சொல்லலைன்னாலோ,புது சினிமாவுக்கு டிக்கட் ரிஸர்வ் பண்ணலைன்னாலோ உடனே கழட்டிவிட்டுடுங்க..இப்படிப்பட்ட கஞ்சப் பையன் உங்களுக்கு எதுக்கு?

அட ...எதுக்குங்க இப்படியெல்லோரும் வந்து என் கால்ல விழுறீங்க..எங்கிட்டாவது என்னை மாதிரி ஒரு அப்பாவிப்பையனப் பார்த்துக் கட்டிக்கிட்டு,சீரியல் பார்க்காமச் சந்தோஷமா இருங்க பொண்ணுங்களா.. icon_smile.gif

அப்புறம்.. மறக்காம படிச்சுட்டு அப்படியே மறந்துடுங்க.... !!!!!! icon_wink.gif

Gopenath.
View user's profileSend private message
Display posts from previous:       
Post new topic Reply to topic

View next topic
View previous topic
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB All times are GMT - 7 Hours